×

முதியவரிடம் இருந்து மனுவை வாங்க மறுத்தது தவறுதான்: வருத்தம் தெரிவித்த ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி

திருவனந்தபுரம்: ஒன்றிய இணையமைச்சரான சுரேஷ் கோபி கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திருச்சூரில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த கொச்சு வேலாயுதன் என்ற முதியவர் தன்னுடைய சேதமடைந்த வீட்டை கட்டித்தர கோரி மனு கொடுக்க முயற்சித்தார். ஆனால் அவரிடம் இருந்து மனுவை வாங்க சுரேஷ் கோபி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னுடைய செயலுக்கு சுரேஷ் கோபி நேற்று வருத்தம் தெரிவித்தார்.
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்: இந்நிலையில் நேற்று திருச்சூர் அருகே உள்ள இரிஞ்சாலக்குடாவில் சுரேஷ் கோபி பொதுமக்களை சந்தித்தார். அப்போது, மோசடி நடந்த அங்குள்ள கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் இருந்து, தன்னுடைய பணத்தை எடுத்து தர உதவ வேண்டும் என்று கூறி, ஒரு மூதாட்டி சுரேஷ் கோபியிடம் மனு கொடுத்தார். அந்த மனுவை வாங்க மறுத்த சுரேஷ் கோபி, முதல்வரிடம் கொடுக்குமாறு கூறினார். என்னால் எப்படி முதல்வரை சந்திக்க முடியும் என்று அந்த மூதாட்டி கேட்டார். அப்படி என்றால் என் நெஞ்சின் மீது ஏறிக்கொள்ளுங்கள் என்று அந்த மூதாட்டியிடம் சுரேஷ் கோபி ஏளனமாக கூறினார்.

Tags : Union Minister ,Suresh Gopi ,Thiruvananthapuram ,Union Minister of State ,Thrissur ,Kochu Velayudhan ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...