×

குலசை கோயிலில் அம்மன் சப்பர வீதியுலா

உடன்குடி,செப்.18: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆவணிமாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அம்மன் சப்பரத்தில் வீதி உலா நடந்தது. இதையொட்டி காலை 6மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 8மணிக்கு காலசந்திபூஜை, மதியம் 2மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Amman Sapparam ,Veediyula ,Kulasekaranpattinam Temple ,Udangudi ,Kulasekaranpattinam Mutharamman Temple ,Avani ,Kalasanthi Pooja ,Uchikala Pooja ,Sayaratchai Pooja ,
× RELATED மூதாட்டிகளிடம் சில்மிஷம் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது