×

புரட்டாசி மாதப்பிறப்பையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்; 24 மணி நேரமும் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அறிவிப்பு

ஆந்திரா: புரட்டாசி மாதப்பிறப்பையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் 24 மணி நேரமும் இலவச தரிசனம் செய்ய தேவஸ்தானம் அறிவித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது வைணவ பக்தர்களுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. பெருமாளுக்கு இந்த மாதம் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு புரட்டாசி மாதம் முதல் நாளையொட்டி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இலவச தரிசனத்தில் வைகுண்டம் குழு காம்ப்ளெக்ஸிஸ் உள்ள 31 அறைகளும் நிரம்பி கிருஷ்ண தேஜா ஓய்வறை வரை 2 கிலோ மீட்டருக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதனால் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்கு 18 முதல் 24 மணி நேரம் ஆகும் என தேவஸ்தானம் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதே போன்று சர்வ தரிசனம் டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு 7 மணி நேரமும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்து 67 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில் உண்டியலில் ரூ.3 கோடியே 87 லட்சம் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Tags : Tirupathi Elumalayan Temple ,Puratasi ,Devastana ,Tirupathi Elemalayan Temple ,Vainava ,Perumal ,
× RELATED டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்கை...