திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது: சபரிமலையில் துவாரபாலகர் சிலை தங்கத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக முறையான அனுமதி பெற்ற பின்னர் தான் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பான எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம்.
சபரிமலையில் எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் அதற்கு சிலர் இடையூறு செய்கின்றனர். பூஜை விவகாரங்களில் கூட தேவையில்லாமல் தலையிடுகின்றனர். அவர்கள் யார் என்று கூற விரும்பவில்லை. இந்த காரணத்தால் சபரிமலைக்கு வருவதற்கும், நன்கொடை அளிப்பதற்கும் பக்தர்கள் பயப்படும் சூழல் உருவாகியுள்ளது. வேறு எந்தக் கோயிலுக்கும் இதுபோன்ற மோசமான நிலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
