×

முகப்பேரில் அதிகாலையில் பிரபல ரவுடி வீடு மீது குண்டு வீச்சு: மற்றொரு ரவுடி கும்பலுக்கு வலை

அண்ணாநகர்: முகப்பேரில் பிரபல ரவுடி வீட்டின் மீது குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் ரவுண்ட் பில்டிங் பகுதியை சேர்ந்தவர் மணிரத்தினம் (27). பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. ஜெ.ஜெ.நகர் காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி. மணிரத்தினம் தனது கூட்டாளியும் ரவுடியுமான சூர்யா மற்றும் அவர்களது நண்பர்கள் ஆகியோருடன் நேற்றிரவு முகப்பேர் பகுதியில் உள்ள குப்பைமேட்டில் மது அருந்தியுள்ளார். போதை அதிகமானதும் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியுள்ளது. அப்போது ரவுடி மணிரத்தினம், சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகளை ஓட, ஓட விரட்டி தாக்கியபோது அடிதாங்க முடியாமல் விட்டுவிடு என்று கதறியபடி அங்கிருந்து ஓடியுள்ளனர். இதன்பிறகு மணிரத்தினத்தை எப்படியாவது தாக்கவேண்டும் என்று சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 1.30 மணி அளவில் சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகியோர் வந்து ரவுடி மணிரத்தினம் வீட்டின் அருகே காத்திருந்துள்ளனர். ஆனால் மணிரத்தினம் வீட்டில் இருந்து வெளியே வராததால் எரிச்சல் அடைந்த சூர்யா கும்பல் தாங்கள் தயாரித்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றுவிட்டனர். இதில் தீப்பற்றி எரிவது பார்த்து அப்பகுதி மக்கள் ஓடிவந்து ரவுடி மணிரத்தினம் வீட்டின் கதவை தட்டியதுடன் தீயை அணைத்துவிட்டனர். இதன்பிறகு மணிரத்தினம் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜெ.ஜெ.நகர் போலீசார் வந்து மணிரத்தினத்திடம் விசாரித்தனர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

‘முகப்பேர் ரவுண்ட் பில்டிங் பகுதியில் சமீபகாலமாக ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தற்போது நள்ளிரவில் ரவுடி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டுள்ளது. இதுபோல் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் அச்சத்தில் உள்ளோம். எனவே, போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்’ என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

தம்பதிக்கு வெட்டு
முகப்பேர் கலைவாணர் நகரில் மளிகை கடை நடத்துபவர் வேல்முருகன் (33). இவர் நேற்றிரவு 11 மணி அளவில் கடையை மூடியுள்ளார். அப்போது சூர்யா தனது கூட்டாளிகளுடன் வந்து மாமூல் கேட்டதுடன் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். ஆனால் மாமூல் கொடுக்க மறுத்த காரணத்தால் வேல்முருகனை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்து தடுத்த அவரது மனைவி தமிழ்மதி(30) என்பவரையும் சூர்யா கும்பல் வெட்டிவிட்டு சென்றுள்ளனர்.

Tags : Rawudi ,Mukapere ,Annanagar ,Raudi ,Manratnam ,Mukapere Round Building ,Chennai ,J. J. History ,Nagar Police Station ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது