×

அதிமுகவிற்கும் தொண்டர்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ளார் எடப்பாடி பழனிசாமி: ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “இருபெரும் தலைவர்கள் மறைவுக்கு பின் தொண்டர்கள் கண்ட பொக்கிஷமாக எடப்பாடி உள்ளார். பொதுநலத்துடன், சேவை நோக்கத்துடன் எடப்பாடி திகழ்ந்து துரோகிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை செல்லாக்காசுகள் எடுத்து வைக்கின்றன.

அதிமுகவை தேசப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள் அது போதும் நடக்காது. கட்சி ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை எழுப்பியவர்கள் செல்லாக்காசாக போய்விட்டனர். எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு சில செல்லாக்காசுகள் சலசப்பு ஏற்படுத்தினாலும் அதிமுகவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. அதிமுகவிற்கும் தொண்டர்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ளார் எடப்பாடி பழனிசாமி,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : EDAPPADI PALANISAMI ,ADAMUGUV ,NADU ,R. B. Udayakumar ,Chennai ,Tamil Nadu Assembly ,Deputy Leader ,Simma ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...