×

கஞ்சா விற்றவர் கைது

 

மணப்பாறை, செப், 16: மணப்பாறை நகரில் இளைஞர்களுக்கு மர்ம நபர்களால் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து போலீஸார் தணிக்கையில் ஈடுபட்டபோது, ரங்கம் வட்டம் மலைப்பட்டி ஹரி பாஸ்கர் காலனியை சேர்ந்த சேகர் மகன் பிரபாகரன்(45), விராலிமலை சாலையில் உள்ள பாரதியார் நகர் பகுதியில் சிறு பொட்டலங்களாக கஞ்சாவை வைத்து இளைஞர்களுக்கு கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தபோது கையும் களவுமாக கைது செய்த மணப்பாறை போலீசார், போதை பொருட்களை பறிமுதல் செய்து பிரபாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.

Tags : Manapparai ,Shekar Magan ,Hari Bhaskar Colony ,Malaipatti ,Rangam Taluk… ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...