- பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் மாவட்டம்
- மாவட்ட வருவாய் அலுவலர்
- பொது குறை மறுசீரமைப்பு நாள்
- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்
- தேசிய நெடுஞ்சாலைகள்
- பவானி…
தஞ்சாவூர், செப்.16: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பவானி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 486 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பவானி அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ராமன், உதவி ஆணையர் (கலால்) ரேணுகாதேவி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

