×

விராலிமலையில் ஓரணியில் தமிழ்நாடு திமுகவினர் உறுதிமொழி

 

 

விராலிமலை, செப்.16: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை தொகுதி 255 பூத்களிலும் திமுகவினர் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு
உறுதி மொழி ஏற்கப்பட்டது.
மண் – மொழி – மானம் ஆகியவற்றை எந்நாளும் காப்பேன். ஆதிக்கச் சக்திகளின் முன் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன். நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காக போராடுவேன். ஒருபோதும் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன். நான் தமிழ் மொழி, பண்பாடு, பெருமைக்கு எதிராக எந்த ஒரு பாகுபாட்டையும் எதிர்த்து போராடுவேன்.
எதற்காகவும் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என உறுதியளிக்கிறேன். நான் பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்க தேவையான நிதிக்காக போராடுவேன். தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்று உறுதி ஏற்கிறேன். இவ்வாறு திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

Tags : Tamil Nadu ,Pledge ,Orani ,Viraalimala Viraalimalai ,Pudukkottai District, ,Viralimalai Legislative ,Tamugvinar ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...