×

அரியலூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 

 

அரியலூர், செப். 16: அரியலூர் அரசு கலைக்கல்லூரி ரோட்டிலுள்ள மின்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், பெரம்பலூர், அரியலூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமையன்று மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் என அரியலூர் கோட்ட செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்:தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டம் சார்பாக இன்று காலை 11 மணியளவில் ‘‘மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” மேற்பார்வைபொறியாளர் மற்றும் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் பெரம்பலூர் தலைமையில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே, அதுசமயம் இக்கோட்ட மின்நுகர்வோர். விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன் அடைந்திட வேண்டுமாய் என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Electricity Consumer Grievance Redressal Day ,Ariyalur ,Electricity Division ,Ariyalur Government Arts College Road ,Perambalur ,Supervising Engineer ,Ariyalur Division ,Executive Engineer ,Ayyanar… ,
× RELATED 350 மாணவ, மாணவிகள் பங்கேற்பு பெரம்பலூர்...