- முதல் அமைச்சர்
- சென்னை
- சுகாதார துறை
- உணவு பகுப்பாய்வு ஆய்வகங்கள்
- அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
- ஓமந்தூரார் அரசு தோட்டம், சென்னை...
சென்னை: சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், பொது சுகாதாரத்துறையில் ஆய்வக நுட்புநர் பணியிடம், உணவு பகுப்பாய்வு கூடங்களில் முதுநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 33,987 பேருக்கு பணிநியமன ஆணைகள் திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு வழங்கப்பட்டிருக்கிறது.
43,755 பேருக்கு கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. 2250 கிராம சுகாதார செவிலியர்களில் அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு பணி ஆணைகள் தரலாம் என்கின்ற வகையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்தது. இந்த 2250 பேரில் 1,231 பேருக்கு பணி ஆணைகள் தருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு அவரவர் விரும்பும் இடங்களிலேயே பணி ஆணைகள் தரப்பட உள்ளது. வரும் 22ம் தேதி தமிழ்நாடு முதல்வரால் சென்னை கலைவாணர் அரங்கில் 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
