×

நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி 30 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த ஜுவாலா கட்டா

சென்னை: பேட்மிண்ட்டன் வீராங்கனையான 42 வயதான ஜூவாலா கட்டா, கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி நடிகர் விஷ்ணு விஷாலை கரம்பிடித்தார். ஜூவாலா கட்டா – விஷ்ணு விஷால் இணைக்கு நான்கு ஆண்டுகளுக்கு பின் கடந்த ஏப். 22ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிக்கு பிறக்கும் முதல் குழந்தை இது. விஷ்ணு விஷாலுக்கு அவரது முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகன் உள்ளார். அவர் பெயர் ஆர்யன். இந்நிலையில், ஜூவாலா கட்டா தற்போது தனது தாய்பாலை தானம் அளிக்க முன்வந்துள்ளார். அதாவது, அரசு மருத்துவமனையில் தினமும் 600 மில்லி தாய்பாலை அவர் தானம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தாய் இன்றி ஆதரவில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு தாயாக உதவும் வகையில் ஜூவாலா கட்டா இந்த செயலை முன்னெடுத்துள்ளார். இதுவரை அவர் சுமார் 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுவாலா கட்டாவின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Tags : Vishnu Vishal ,Jwala Khatta ,Chennai ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...