×

ஜார்க்கண்டில் துப்பாக்கிச் சண்டை ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட தலைவன் உள்பட 3 நக்சல் பலி: பாபுலால் மராண்டி மகனையும் 12 போலீசாரையும் கொன்றவர்கள்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் கோர்ஹார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டித்ரி காட்டில் நேற்று காலை 6 மணியளவில் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த சஹ்தேவ் சோரனின் படையினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த மோதலில் ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் சஹ்தேவ் சோரன் மற்றும் சஞ்சல் மற்றும் பிர்சென் கஞ்சு ஆகிய நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில் இரண்டு பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தனர். சஞ்சல் அமைப்பின் சிறப்புப் பகுதிக் குழு உறுப்பினர்.

அவரது தலைக்கு ரூ.25 லட்சம் வெகுமதியும், மண்டல குழு உறுப்பினராக இருந்த பிர்சென் கஞ்சு தலைக்கு ரூ.10 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டு இருந்தது. என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து மூன்று ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் 63 தோட்டாக்கள் உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்ட சஹ்தேவ் 30 வழக்குகளிலும், ரகுநாத் 58 வழக்குகளிலும், பிர்சென் 36 வழக்குகளிலும் தேடப்பட்டு வந்தனர். மோதல் நடந்த ஜார்க்கண்ட் டிஜிபி அனுராக் குப்தா பார்வையிட்டார். பலியான நக்சல்கள் 12 போலீசாரை சுட்டுக்கொன்ற வழக்கிலும், எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டியின் மகனைக் கொன்ற வழக்கிலும் தொடர்புடையவர்கள். மேலும் போலீசாரிடமிருந்து 183 துப்பாக்கிகளையும் கொள்ளையடித்து சென்றவர்கள் என்று தெரிவித்தார்.

Tags : Jharkhand ,Babulal Marandi ,Ranchi ,Sahdev Soren ,CPI ,Maoist ,Banditri forest ,Korhar ,station ,Hazaribagh district ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது