×

தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் எஸ்பி நாதா ஆய்வு

கொள்ளிடம், டிச. 21: கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் காவல்நிலையத்தில்மயிலாடுதுறை எஸ்பி நாதா ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் மயிலாடுதுறை எஸ். பி. நாதா வருடாந்திர ஆய்வு பணி மேற்கொண்டார். காவல் நிலையத்தில் உள்ள பல்வேறு வழக்குகள் சம்பந்தமான பதிவேடுகள், குற்றபட்டியலில் உள்ளவர்கள் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்த எஸ் பி நாதா காவல் நிலையத்தில் உள்ள கைதிகள் அறை, பதிவேடுகள் அறை மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உடனிருந்தனர்.

Tags : celebration ,private school ,Police Station ,inspection ,Puthuppattinam ,SP Aunatha ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...