×

நங்கவரம் அருகே பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்

கரூர், டிச.21: கரூர் மாவட்டம் நங்கவரம் அருகே டிப்பர் லாரி சென்றதன் காரணமாக சாலை பழுதடைந்துள்ளது. இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் நங்கவரம் பகுதியில் இருந்து திருச்சி, சோமசரம்பேட்டை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை நங்கவரம் பகுதியில் இருந்து சோமரசம்பேட்டை நோக்கி சென்ற டிப்பர் லாரி, ஏற்கனவே, சாலை பழுது காரணமாக செப்பனிப்பட்ட சாலையில் ஏறி இறங்கி சென்றது. இதன் காரணமாக சாலை பழுதடைந்து மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியினர் பழுதடைந்த பகுதியை சுற்றிலும் தடுப்புகள் போட்டு மறைத்துள்ளனர்.எனவே மேலும், இந்த சாலை பழுதடைவதற்கு முன்பு பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் பழுதடைந்த இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : dirt road ,Nangavaram ,
× RELATED குளித்தலை அருகே மொபட்டிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி