×

கோயிலில் விளக்கு திருடியவர் கைது

திருப்பூர்,செப்.15: திருப்பூர், நல்லூர் அடுத்த முத்தனம்பாளையம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த தொங்கும் வடிவிலான பித்தளை விளக்கு திருடு போனது தெரியவந்தது.இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரி (பொ) அன்புதேவி அளித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர்.

இது தொடர்பாக நல்லூர் அடுத்த சத்யா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (45) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கிருஷ்ணன், முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில் உட்பட பல்வேறு கோயில்களில் திருடியது தெரியவந்தது. கிருஷ்ணனை கைது செய்த போலீசார் பித்தளை விளக்கை மீட்டனர்.

 

Tags : Tiruppur ,Hindu Religious and Endowments Department ,Muthanampalayam ,Nallur, Tiruppur ,administrative officer ,PO) Anbudevi… ,
× RELATED அவிநாசி அருகே பூட்டிய வீட்டில் திடீர் தீ விபத்து