×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வரும் 19ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நவாஸ் கனிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் எம்பியுமான நவாஸ் கனி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மசூதி நிதியை முறைகேடு செய்ததாக வாலாஜாபேட்டை சேர்ந்த வழக்கறிஞர் பயாஸ் அகமது என்பவர் புகார் தெரிவித்திருந்தார். மசூதி நிதி முறைகேடு தொடர்பாக வக்பூ வாரிய சூப்பிரண்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார் என மனுவில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை நவாஸ் கனி அமல்படுத்தவில்லை எனக்கூறி அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், வரும் 19ஆம் தேதிக்குள் நவாஸ் கனி எம்பி பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : ICOURT ,Nawaz Kani ,Chennai ,Tamil Nadu Vakpu Board ,Ramanathapuram ,Valajapet ,Biaz Ahmed ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...