×

ஓதுவார் பயிற்சிப் பள்ளி 2025 -26-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025 – 2026ஆம் கல்வி ஆண்டிற்கான பகுதி நேர மாணவ / மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* பகுதி நேரப் பயிற்சி வகுப்பின் காலம் 4 ஆண்டுகள் ஆகும். பகுதி நேர வகுப்புகள் காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் அல்லது மாலை 07.00 மணி முதல் 09.00 மணி வரையிலும் நடத்தப்படும். மேலும், ஒவ்வொரு வாரத்திலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர வகுப்புகள் நடைபெறும்.

* ஓதுவார் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ / மாணவியர் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு வயது 14 முதல் 24 க்குள் இருக்க வேண்டும்.

* இம்மாணவ / மாணவியர்க்கு மாதந்திர ஊக்கத் தொகையாக ரூ.5000/- வழங்கப்படும்.

* பகுதி நேர வகுப்பில் பயில விரும்பும் மாணவ / மாணவியர் அதற்கான விண்ணப்பங்களை www.vadapalaniandavar.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் 13.10.2025 க்குள் துணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை – 600 026 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Tags : Odhuvar Training School ,Chennai ,Arulmigu Vadapalani Andavar Temple ,Vadapalani ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...