×

கீழையூர் காவல் நிலைய முற்றுகை போராட்டம் வாபஸ்

கீழ்வேளூர், செப். 13: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் உமாநாத்தை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதோடு கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்களை வன்கொடுமை தடு ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி கீழையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகஅக் கட்சியினர் அறிவித்தனர்.

தகவலறிந்த கீழையூர் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கீழையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தத்தில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு பேரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப் பதாக போலீஸார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் வெங்கட்ராமன், அப்துல் அஜீஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ராஜா, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

 

Tags : Keelvelur police station ,Keelvelur ,Umanath ,Communist Party of India ,Marxist ,
× RELATED ஓய்வூதியர் தின விழா