×

உடல் உறுப்பு தானம் செய்த 3 பேருக்கு அரசு சார்பில் மரியாதை

சென்னை: உடல் உறுப்பு தானம் செய்த 3 பேருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை வியாசர்பாடி புதிய காமராஜர் நகரை சேர்ந்த மேரி ஜோசப் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கங்கன் ஆகியோர் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், சென்னை அண்ணாநகர் கிழக்கு, அன்னை சத்யா நகரை சேர்ந்த குமார் என்பவர் சென்னை சிம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி இறந்து விட்டனர். முன்னதாக, இறந்தவர்களின் குடும்பத்தினர் அன்னார்களின் உடல் உறுப்பு தானம் செய்வதாக விருப்பம் தெரிவித்தனர்.

குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் மேற்குறிப்பிட்டவர்களின் உடல் உறுப்பு தானமாக அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சம்பந்தப்பட்ட தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் அமைந்தகரை வட்டாட்சியர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்நிகழ்வில் காவல் துறையினர், உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags : Government ,Chennai ,Mary Joseph ,Vyasarpadi ,Puthiya Kamaraj Nagar ,Kangan ,Chittoor, Andhra Pradesh ,Rajiv Gandhi Government… ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்