சென்னை: இரிடியம் மோசடி தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சி.பி.சி.ஐ.டி. சோதனை நடத்தி வருகிறது. 40 இடங்களில் சோதனை நடத்தி 30 பேரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரிடியம் விற்பனை செய்து கோடிக்கணக்கான ரூபாய் ரிசர்வ் வங்கியில் வைத்திருப்பதாக நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் இருந்து வெளியில் எடுப்பதற்கு பணம் தேவை எனக் கூறி முதலீடு செய்ய வைத்து மோசடி நடந்துள்ளது. ஒரு லட்சம் முதலீடு செய்தால் ஒரு கோடி ரூபாய் தருவோம் எனக் கூறி பலரிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகரான படியம்பாக்கம் மூர்த்தி என்பவரது வீட்டில் சிபிசிஐடி நடத்திய சோதனையில், கணக்கில் வராத 3.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
