அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிந்துரையின் பேரில் விருதுநகர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

சிவகாசி, டிச. 18 : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிந்துரையின் பேரில் விருதுநகர் மாவட்டத்தில் புதிய அதிமுக நிர்வாகிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமித்துள்ளனர்.  அதன்படி வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளராக தங்கவேல், மேற்கு ஒன்றிய செயலாளராக  விஜயநல்லதம்பி, அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளராக சங்கரலிங்கம், தெற்கு ஒன்றிய  செயலாளராக வாசுதேவன், ராஜபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளராக குருசாமி, தெற்கு ஒன்றிய செயலாளராக நவரத்தினம், கிழக்கு ஒன்றிய செயலாளராக மாரியப்பன், சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளராக புதுப்பட்டி கருப்பசாமி, மேற்கு ஒன்றிய  செயலாளராக சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 வடக்கு ஒன்றிய செயலாளராக தெய்வம், தெற்கு ஒன்றிய செயலாளராக பலராமன், விருதுநகர் கிழக்கு ஒன்றிய செயலாளராக தர்மலிங்கம், மேற்கு ஒன்றிய  செயலாளராக கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளராக ராஜசேகர், சாத்தூர் நகர செயலாளராக எம்.எஸ்.கே.இளங்கோவன்,  

திருவில்லிபுத்தூர் நகர செயலாளராக எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், மல்லாங்கிணறு பேரூராட்சி செயலாளராக அழகர்சாமி, விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளராக சுபாஷினி, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக துரைமுருகேசன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளராக கோகுலம் தங்கராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளராக எஸ்.எஸ்.கதிரவன்,  விருதுநகர் மேற்கு மாவட்ட மீனவர் அணி பிரிவு செயலாளராக காசிராஜன்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று விருதுநகர் மேற்கு கிழக்கு மாவட்ட, நகர, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியையும், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனையும் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories:

>