×

ராஜபாளையத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், டிச. 18:  ரயில்வே மேம்பால பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தி தராத தமிழக அரசைக் கண்டித்து ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் வெம்பக்கோட்டை - சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம்  அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்தி ஒப்பந்ததாரரிடம் வழங்கி மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு தவறியுள்ளதாக கூறி இந்த போராட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி,  மணிகண்டராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது தங்கப்பாண்டியன் கூறுகையில், ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி டிச.14ம் தேதி துவங்கும் என்று ராஜபாளையம் வட்டாட்சியர் உறுதியளித்திருந்தார். ஆனால், இன்றுவரை நிலம் கையப்படுத்தவில்லை.  எனவே,  காலம் தாழ்த்தாமல் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

Tags : Demonstration ,Rajapalayam ,government ,Tamil Nadu ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!