×

லால்குடி அரசு கலை கல்லூரியில் போதை ஒழிப்பு குறித்த பேச்சு போட்டி

லால்குடி, செப். 12: திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை ஒழிப்பு கருத்தரங்கமும் அது தொடர்பான பேச்சு போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் விஜய் மற்றும் முத்தழகு ஆகியோர் தயாரித்த போதை ஒழிப்பு குறும்படங்கள் திரையிடப்பட்டது.

விழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதலமைச்சர் ஜெயக்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவில் பேராசிரியர்கள் சுலைமான், எழில் பாரதி, ஜெயபிரகாஷ், அசோக், ராஜா, ஆனந்த், தமிழ்மணி, இளமதி, கல்பனா, தீபதேவி, சுகன்யா, அனிதா, வேம்பு மற்றும் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர். போதை ஒழிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

 

Tags : Lalgudi State College of Art ,Lalgudi ,Drug Abolition Seminar ,Lalgudi State College of Arts and Sciences ,Trichy District ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...