×

காரைக்குடி அரசு விழாவில் எம்பி, எம்எல்ஏ பெயர் புறக்கணிப்பு: தாசில்தாரை கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

காரைக்குடி, டிச. 18:  காரைக்குடியில் நடந்த அரசு விழாவில் எம்பி, தொகுதி எம்எல்ஏவுக்கு முறையான அழைப்பு தராமலும், பெயரும் புறக்கணிப்படுவதாக கூறி காங்கிரஸ் நிர்வாகிகள் தாசில்தாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடியில் வட்டாசியர் அலுவலகம் சார்பில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அரசு சார்பில் நடத்தப்படும் இவ்விழாவிற்கு சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், தொகுதி எம்எல்ஏ கேஆர்.ராமசாமி ஆகியோருக்கு முறையான அழைப்பு விடப்பட்டவில்லை என கூறப்படுகிறது.

தவிர நிகழ்ச்சிகளில் பெயர் போடாமல் புறக்கணிப்பதாக கூறி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைதலைவர் மாங்குடி, நகர தலைவர் பாண்டி, நிர்வாகிகள் கதிரவன், ராமேஷ் உள்பட பலர் திடீரென தாசில்தார் ஜெயந்தியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திடீர் என நிகழ்ச்சி நடத்த வேண்டிய நிலை உருவானதால் பெயர் போட முடியவில்லை இனிவரும் நிகழ்ச்சிகளில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து காங். நிர்வாகிகள் கூறுகையில், ஆளும்கட்சியினருக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே அரசு விழாக்களில் தொடர்ந்து எம்பி, எம்எல்ஏ பெயர்களை அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர்’ என்றனர்.

Tags : Karaikudi MP ,MLA ,Tashildar ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...