×

தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட் ராமன் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர் வரதராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது சட்டவிரோதம்,’ என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Venkat Raman ,Tamil Nadu DGP ,Chennai ,Advocate ,Varadaraj ,Chief Justice ,M.M. Srivastava ,G. Arul Murugan ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...