×

பரமக்குடி தொகுதியில் 8 மினி கிளினிக்குகள் துவக்கம்: எம்எல்ஏ ஆய்வு

பரமக்குடி, டிச. 18:  தமிழக அரசு கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதற்காக அம்மா மினி கிளினிக் தி்ட்டத்தை துவக்கியள்ளது. சென்னையில் முதல்வர் எடப்படி பழனிச்சாமியால் துவங்கப்பட்ட இக்கிளினிக் திட்டம் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பரமக்குடி ஒன்றியத்தில் கமுதக்குடி, விளத்தூர் கிராமங்களிலும், கமுதி ஒன்றியத்தில் வங்கருபுரம், டி.புனவாசல் கிராமங்களிலும், போகலூர் ஒன்றியத்தில் மென்னந்தி, முதலூர் கிராமங்களிலும், நயினார்கோவில் ஒன்றியத்தில் கிளியூர், பொட்டகவயல் கிராமங்களிலும் மினி அம்மா கிளினிக் துவங்கப்பட்டுள்ளது.

இதனை பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து எம்எல்ஏ மினி கிளினிக் சிகிச்சை முறைகள் குறித்து சுகாதாரத்துறை, மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உடன் பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சரயூ ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

Tags : Launch ,clinics ,constituency ,Paramakudi ,MLA ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...