நாகையில் மீனவர் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

நாகை, டிச.18: நாகை கீச்சாங்குப்பம் பகுதியில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். நாகை கீச்சாங்குப்பம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அற்புத செல்வம் ( 34). மீனவர். இவர் கடந்த 15ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதன் உள்ளே இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ 50,000 பணத்தை காணவில்லை. மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்கம் கதவை திறந்து உள்ளே வந்து திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகை டவுன் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதனிடையே மோப்ப நாயுடன் வந்த போலீசார் அந்த பகுதியை சுற்றி சோதனை செய்தனர். ஆனால் நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

Related Stories:

>