×

ஆர்எஸ்.மங்கலம் அருகே குறைந்த மின்அழுத்தத்தால் பேன், மிக்ஸி, கிரைண்டர் அடிக்கடி ‘அவுட்’: பொதுமக்கள் அவதி

ஆர்எஸ்.மங்கலம், டிச. 18: ஆர்எஸ். மங்கலம் அருகே குறைந்த மின்அழுத்தத்தால் பேன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆர்எஸ் மங்கலம் அருகே சாத்தனூர் ஊராட்சிக்குட்பட்டது மொன்னார்கோட்டை, விருதன்வயல் கிராமங்கள். இவ்வூர்களுக்கு வளனை, எலிக்குளம் பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பாரம் மூலம் மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்ம்களின் மின்திறனுக்கு ஏற்றார் போல் மின்இணைப்புகள் வழங்காமல், கூடுதல் கிராமங்களையும் இணைத்து மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் மொன்னார்கோட்டை, விருதன்வயல் கிராமங்களில், பல ஆண்டுகளாக குறைந்த மின்அழுத்தத்துடன் மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது இதனால் பேன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குறைந்த மின்அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகியும் விடுகின்றன. இதனால் மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி சுமன் கூறுகையில், ‘குறைந்த மின்னழுத்த பிரச்னையை போக்க மொன்னார்கோட்டை, விருதன்வயல் கிராமங்களில் தனித்தனியாக டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் புதிய டிரான்ஸ்பார்ம் அமைத்து தந்து உதவிட வேண்டும்’ என்றார்.

Tags : Pan ,suffering ,RS Mangalam: Public ,
× RELATED அதிக டிடிஎஸ் பிடித்தம் தவிர்க்க மே...