×

நமது காலத்தின் ஹிட்லர்: ஓட்டலுக்கு சாப்பிட சென்ற டிரம்ப்புக்கு எதிராக கோஷம்

வாஷிங்டன்: காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை அமெரிக்கா முன்நின்று நடத்துவதாக கருத்து எழுந்துள்ளது. இந்த சூழலில் அதிபர் டிரம்ப் நேற்று மாலை வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட சென்றார். வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள ஜோஸ் கடல் உணவு உணவகத்திற்குள்அவர் நுழைந்தபோது, ​​திடீரென ஒரு சிறிய குழுவினர் சுதந்திர வாஷிங்டன், சுதந்திர பாலஸ்தீனம் என்று கோஷமிட்டனர்.

மேலும் டிரம்ப்பை நோக்கி நமது காலத்தின் ஹிட்லர் என்று அழைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை நோக்கி டிரம்ப் கூறுகையில்,’ எங்களுக்கு ஒரு பாதுகாப்பான நகரம் உள்ளது. அதனால் இது நல்லது. நீங்களே மகிழுங்கள். வீட்டிற்குச் செல்வதில் நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள். எல்லாரும் மகிழ்ச்சியாக இருங்கள். அதிகமாக குடிக்க வேண்டாம்’ என்று அறிவுரை வழங்கினார். அதிபர் டிரம்ப் உடன் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் சென்று இருந்தனர்.

Tags : Hitler ,Trump ,Washington ,Israel ,Gaza Strip ,United States ,Chancellor ,Washington DC ,White House ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி