×

கால் அழுகியதால் துண்டிக்க டாக்டர்கள் முடிவு எச்ஐவி நோயாளி கழுத்தறுத்து தற்கொலை: ஸ்டான்லியில் பரபரப்பு

தண்டையார்பேட்டை, டிச.18: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எச்ஜவி நோயாளிக்கு, ஒரு கால் முழுவதும் அழுகியதால் அதை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். இதனால் மனமுடைந்த நோயாளி, மருத்துவமனை வளாகத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திது.

வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை  சேர்ந்தவர் வேணுகோபால் (40), கூலி தொழிலாளி.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இவருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டது. இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட இவரை, உறவினர்கள் கடந்த  3ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள எச்ஐவி சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

அங்கு, சிகிச்சை பெற்று வந்த வேணுகோபாலுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன், வலது கால் முழுவதும் அழுகியது. அதை அப்படியே விட்டால் உடல் முழுவதும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து, காலை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதனால், மனமுடைந்த வேணுகோபால், நேற்று முன்தினம் மாலை மருத்துவமனை வளாகத்தில்  கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Doctors ,suicide ,HIV patient ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை