×

ஏஐ-யால் 2030க்குள் 99% வேலைவாய்ப்புகள் பறிபோகும் என அமெரிக்க பேராசிரியர் தகவல்..!!

ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு வரவால் 2030ஆம் ஆண்டுக்குள் 99சதவீதம் வேலைவாய்ப்பு பறிபோகும் என அமெரிக்க பேராசிரியர் ரோமன் யம்போல்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லூயிஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக உள்ள ரோமன் யம்போல்ஸ்கி மனிதனை போன்ற நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு வரும் 2027ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்குள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏஜியை வரவேற்றபிறகு AI கருவிகள் மற்றும் மனித உருவ ரோபோக்கள் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டு தொழிலாளர்களின் 99 விழுக்காடு வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார். குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து உடல் உழைப்பும் தானியங்கிமயம் ஆக்கப்படலாம் என்றும் அப்போது மாற்றுத்திட்டங்கள் எதுவும் இருக்காது என்று தெரிவித்துள்ளார். ஆனால் AI ஆல் ஏஞ்சிலெவல் வாய்ப்புகள் தான் பறிபோகும் என்றும் அதை விட பல நவீனமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

Tags : US ,Roman Yambolsky ,Lewis University ,United States ,
× RELATED வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய...