×

திருப்பூர் குளத்துப்புதூரில் சாலையில் நாற்று நட்டு தி.மு.க. ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச.18: திருப்பூர்  மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில்  குளத்துப்புதூர் பகுதியில் கிழக்கு மாவட்ட பொறுப்பார் மு.பெ.சாமிநாதன் தலைமை ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுப்பையன்,  மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் திருமூர்த்தி, ரத்தினசாமி, கீர்த்தி  சுப்ரமணியன், பாலுசாமி, ராஜசேகர், சோமசுந்தரம், வீரபாண்டி பகுதி  பொறுப்பாளர் முருகசாமி, ஊராட்சி தலைவர் மூர்த்தி, ஆண்டிபாளையம் வார்டு  பொறுப்பாளர் முத்துக்குமாரசாமி, தி.மு.க. பிரமுகர் தமிழரசு உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு  எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து,  மங்கலம் ரோட்டில் சாலை வசதியை சரிசெய்ய கோரியும், பாதாள சாக்கடை பணிகளை  விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் சேறும் சகதியுமாக  இருந்த ரோட்டில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : road ,Demonstration ,Tirupur Kulathuputhur DMK ,
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...