×

மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிப்பது அவசியமானது: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம்

டெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிப்பது அவசியமானது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம் செய்வது அவசியமானது. தமிழ்நாடு வழக்கைப் பொறுத்தவரையில் 2023ல் மனுத்தாக்கல் செய்து 2025ம் ஆண்டுதான் தீர்ப்பு கிடைத்துள்ளது. காலநிர்ணயம் செய்த தீர்ப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. குடியரசுத் தலைவரின் கேள்விகளை நிராகரிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு, ஆளுநர் வழக்கின் தீர்ப்பிலேயே பதில்கள் உள்ளன என தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் வில்சன் வாதத்தை முன்வைத்தார்.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,Delhi ,Tamil Nadu ,
× RELATED வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்..!!