×

கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதிஷ் கிருஷ்ணா சாய்லை கைது செய்தது அமலாக்கத்துறை..!!

கர்நாடகா: கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதிஷ் கிருஷ்ணா சாய்லை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கோவாவில் நடத்தி வரும் சூதாட்ட விடுதிகளில் சட்டவிரோதமாக, ‘பெட்டிங்’ நடத்தி, சொத்து குவித்ததாக கர்நாடகாவின் சித்ரதுர்கா காங்., – எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியை, அமலாக்கத்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். அவரது வீட்டில் நடத்திய அதிரடி சோதனையின்போது, கணக்கில் காட்டப்படாத 11 கோடி ரூபாய் ரொக்கம், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், சட்டவிரோத இரும்பு தாது ஏற்றுமதி வழக்கில் கர்வார்- அங்கோலா சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஷ்கிருஷ்ணா சாய்ல் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஆகஸ்ட் 13, 14ல் எம்.எல்.ஏ. தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமலாக்கத்துறை சோதனையில் ரூ.1.68 கோடி ரொக்கம், ரூ.6.75 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.14 கோடி வைப்புத் தொகை உள்ள வங்கிக் கணக்குகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட நிலையில், ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை சதீஷ் கிருஷ்ணா சாய்லை கைது செய்தது.

Tags : Karnataka Congress M. L. A. Enforcement Department ,Satish Krishna Sail ,Karnataka ,Karnataka Congress ,M. L. A. ,Enforcement Department ,Chitradurga Kang ,Goa. ,M. L. PA ,Veerendra Pappi ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...