×

கனமழை காரணமாக கொடைக்கானலில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல்: கனமழை காரணமாக கொடைக்கானலில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக கொடைக்கானலில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார்.6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடப்பதால் 6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பதை தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Kodaikanal ,Dindigul ,ATMOSPHERIC ,SOUTH INDIAN REGIONS ,north- ,south- ,
× RELATED ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள்...