×

ராகுலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு பாஜ தொண்டரிடம் அமலாக்கத்துறை விசாரணை

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜ தொண்டர் விக்னேஷ் ஷிஷிர். இவர் ராகுல்காந்தி இங்கிலாந்து குடிமகன் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் மற்றும் இங்கிலாந்து அரசின் சில மின்னஞ்சல்கள் தன்னிடம் இருப்பதாகவும் எனவே அவர் இந்தியாவில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 37ன் கீழ் விக்னேஷ் ஷிஷிருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகக்கோரி சம்மன் அனுப்பி இருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் நேரில் ஆஜரானார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும் விக்னேஷிடம் இருக்கும் ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படியும் அதிகாரிகளால் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

Tags : Enforcement Directorate ,BJP ,Rahul ,New Delhi ,Vignesh Shishir ,Karnataka ,Allahabad High Court ,UK government ,Rahul Gandhi ,UK ,India ,
× RELATED மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்...