×

நெல்லையில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பயணிகள் படுகாயம்

நெல்லை: நெல்லையில் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் 14 பயணிகள் காயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து அதிகாலை 4 மணிக்கு நெல்லை நோக்கி அரசு பேருந்து பயணிகளுடன் புறப்பட்டு வந்துகொண்டு இருந்தது. இந்த பேருந்து ஆனது நெல்லை அருகில் உள்ள கொங்கராயக்குறிச்சி பகுதியில் வந்தபோது, திடீர் என 5 மணியளவில் ஒரு மாடு குறுக்கே வந்துள்ளது. இந்த மாட்டை கண்டதும் அந்த பேருந்து ஓட்டிவந்த வடிவேலு என்ற டிரைவர் திடீர் என பிரேக்கை அலுத்தியுள்ளார், உடனடியா வண்டியானது அருகில் இருக்கக்கூடிய சாலையோரத்தில் ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.

பேருந்தில் இருந்த 20க்கும் மேலான பயணிகள் அந்த விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்டு இருந்தனர். பேருந்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிர்த்து கொண்டு இருந்த அவர்களை அக்கபாக்கம், பெருமாள்புரம் காவல் துறையினர் உடனடியாக வந்து மீட்டனர். இதில் 14 பயணிகளுக்கு சிறியளவிலான காயம் ஏற்பட்டு இருந்தது. தொடர்ந்து 14 பயணிகளும் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அங்க அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Nellai ,Thiruchendur ,Thoothukudi district ,Nellai… ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...