×

வேலூர் இப்ராஹிம் கடலூர் சிறையில் அடைப்பு

கடலூர்: பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாகக் கூறி அவதூறு பரப்பினார். ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வேலூர் இப்ராஹிம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் இப்ராஹிமை கைதுசெய்த போலீசார், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறைக்கு பதில் கடலூர் சிறையில் வேலூர் இப்ராஹிம் அடைக்கப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Ibrahim ,Cuddalore ,Vellore ,Vellore Ibrahim ,BJP ,Rajiv Gandhi ,Hospital ,Rajiv Gandhi Hospital ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு