×

கோயில் தீர்த்தங்களை திறக்கக்கோரி ராமேஸ்வரத்தில் தீர்த்தம் குளிக்கும் போராட்டம்

ராமேஸ்வரம், டிச.17:  ராமேஸ்வரம் கோயிலிலுள்ள தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு அனுமதியளிக்க வலியுறுத்தி இந்திய கம்யூ.கட்சி சார்பில் கோயில் முன்பு தீர்த்தம் குளிக்கும் போராட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு தடை அறவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் தீர்த்தமாட தடை விதிக்கப்பட்டது. அரசால் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் கூடும் கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல அரசு அனுமதியளித்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் கோயிலிலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவதற்கு போடப்பட்ட தடை இன்று வரை தொடர்கிறது. இதனால் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கடலில் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். கோயிலுக்குள் தீர்த்தம் குளிக்காமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர்.

இந்நிலையில் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதற்கு அரசு அனுமதி அளிக்க வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூ.,கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று ராமநாதசுவாமி கோயில் கிழக்கு நுழைவு வாயில் முன்பு தாலுகா குழு உறுப்பினர் ஜோதிபாசு தலைமையில் கூடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் தீர்த்தம் குளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் பங்கேற்றனர்.

Tags : opening ,Rameswaram ,
× RELATED ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்!