திருச்சி, செப்.9: திருச்சியில் கண்தான விழிப்புணர்வு பேரணி நேற்று அரசு மருத்துவமனையில் நடந்தது.
திருச்சி, மாவட்ட கண்பார்வை குறைபாடு தடுப்பு அமைப்பு சார்பில் 40வது கண்தான 2வது வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து கண்தானம் குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த, திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் மாணவிகள் கலந்துகொண்ட பேரணி நடந்தது.
இந்த பேரணியை உதவி மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான வாசகங்களை கொண்ட பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றிவந்து நிறைவடைந்தது.
