×

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், செப். 9: பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரபாண்டியன், செந்தில் குமார், குமரி ஆனந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமுல்படுத்திட வேண்டும். இடைநிலை முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்ச வரம்பினை 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புச் சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் தங்கள் கோரிக்கை மனுவை தமிழ் நாடு முதலமைச்சரிடம் வழங்கும்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

Tags : JACTO-GEO ,Perambalur ,Sundarapandian ,Senthil Kumar ,Kumari Anandan ,Collectorate Children's Park ,
× RELATED 350 மாணவ, மாணவிகள் பங்கேற்பு பெரம்பலூர்...