- அரும்பாவூர் பேரூராட்சி
- பெரம்பலூர்
- எம்பிசி காலனி
- பூலாம்பாடி பிரதான சாலை
- வேப்பந்தட்டை தாலுகா
- பெரம்பலூர் மாவட்டம்…
பெரம்பலூர், செப். 9: காலனிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பேரூராட்சி, பூலாம்பாடி மெயின் ரோட்டில் வசிக்கும் எம்.பி.சி காலனி பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து மனு அளித்தனர். மனுவில் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சியில், பூலாம்பாடி மெயின் ரோட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு தமிழக அரசால் எம்பிசி காலனியில் இலவசமாக மனை வழங்கி, அதில் நாங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றோம். இந்நிலையில் எங்களின் எம்.பி.சி காலனிக்கு அருகில் சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்து வரும் ஒருவர், எங்களின் எம்.பி.சி காலனிக்கு சொந்தமான நிலத்தினை சட்ட விரோதமாக மோசடி செய்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளார்.
எனவே பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நாங்கள் குறிப்பிடும் இடத்தை நேரடியாக தள பார்வையிட்டு எம்.பி.சி காலனிக்கு சொந்தமான நிலத்தினை ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்டு தந்து உதவ வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
