×

ஊதிய ஊயர்வு அரசாணை வெளியிட கோரிதூய்மை பணியாளர், தொட்டி ஆபரேட்டர் மனு கொடுக்கும் போராட்டம்

திண்டுக்கல், டிச. 17: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. சிஐடியு சம்மேளன பொது செயலாளர் கணேசன் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் ராசமாசி, பொருளாளர் ராணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திலுள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை தொட்டி ஆபரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,

முதல்வர் அறிவித்தபடி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வு, மேல்நிலை தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.1400 ஊதிய உயர்வு வழங்க அரசாணை வெளியிட வேண்டும், 3 ஆண்டு பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள், மேல்நிலை தொட்டி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் விஜயலட்சுமியிடம் வழங்கினர்.

Tags : Purification worker ,tank operator ,pay rise government ,
× RELATED செங்கம் ஒன்றியத்தில் டேங்க்...