×

நீடாமங்கலத்திலிருந்து 2,000 டன் நெல் மூட்டைகள் மதுரைக்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலம், டிச.17: டெல்டா பகுதியில் விளையும் நெல்மணிகளை அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து பெற்று, அதனை குடோன்களில் சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் அந்த மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு அரவைக்காக ரயில் வேகன்களில் அனுப்பி வைத்து, பிற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி பொது விநியோக திட்டத்திற்காக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மூவாநல்லூர், அசேஷம், இடையர்நத்தம், தெற்குநத்தம், கொக்கலாடி, சுந்தரபுரி ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் சன்னரக நெல் மூட்டைகள் 160 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அங்கீருந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றி அரவை பணிக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : Madurai ,Needamangalam ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை