×

நாளை இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணிவரை சந்திர கிரகணம் நடைபெறும்: விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி தகவல்

கொடைக்கானல்: கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் நாளை நடக்க இருக்கும் சந்திரகிரகணம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி கூறுகையில்; பூமியை நிலவு சுற்றிவரும் போது சூரியனில் இருந்து வெளியேறும் கதிர்கள் பூமி மீது பட்டபிறகு அதன் நிழல் நிலவின் மீது படும் நிகழ்வை சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. நாளை இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணிவரை சந்திர கிரகணம் நடைபெற இருப்பதாகவும்,அதன் உச்சகட்டமாக 11 மணிக்கு காணக்கூடும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக இரவு 12 மணியளவில் நிலவு ஆரஞ்சு , காப்பர் மற்றும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்றும் அதனை ரெட் மூன் என்று அழைப்பதாக தெரிவித்தார்.

இதனை வானம் தெளிவாக தென்பட்டால் தொலைநோக்கி மூலமாகவும், வெறும் கண்களில் கூட பார்க்கலாம் எனவும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார். அடுத்த சந்திர கிரகணம் நிகழ்வானது 2028 டிசம்பர் மாதத்தில் தோன்றும் என தெரிவித்தார். முந்தைய காலத்தில் இந்த நிகழ்வு குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் அதை மூட நம்பிக்கையாக பார்த்த நிலையில் தற்போது அதன் நிகழ்வு குறித்து புரிந்து கொண்டதாக அவர் கூறினார்.

குறிப்பாக சந்திர கிரகணம் நடைபெறும் நேரத்தில் விமானத்தில் செல்பவர்கள் பூமியில் இருந்து 10 ஆயிரம் கிமீ தொலைவில் செல்லும் போது இந்த அரிய நிகழ்வை சற்று அருகில் கண்டு ரசிக்கலாம் என்றார்.மேலும் இந்த நிகழ்வை கொடைக்கானல் அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வகத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பெங்களூரில் இருந்து iia மூலம் யூடியூப் சேனல் மூலமாகவும் கண்டுரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags : Lunar eclipse ,Crispin Karthi ,Kodaikanal ,Astrophysical Observatory ,Kodaikanal Observatory ,earth ,earth… ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...