×

ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் மரியாதை

 

சென்னை: ஆக்ஸ்போர்ட்டில் ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்தியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:  ஜி.யு.போப் 19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார். தமிழ்ச்சுவையை உலகறிய திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார். ஆக்ஸ்போர்ட் அறிவாலயத்தில் பேராசிரியராக தமிழ் தொண்டாற்றினார். ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரை போற்றாமல் வருவது அறமாகுமா? அங்குள்ள ஜி.யு.போப் அவர்களது கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : G. ,Pope ,Chennai ,Oxford U. ,Chief Minister ,K. ,Stalin ,G. U. ,Tamil Nadu ,Deerak ,Thirukkurala ,Thiruvasagam ,Naladiar ,
× RELATED பல்கலைகழக துப்பாக்கிசூடு எதிரொலி:...