×

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

 

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் செப்டம்பர் 8ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூரில் செப்.8. கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Puduwa ,Karaikal ,Chennai Meteorological Centre ,
× RELATED ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள்...