×

2 கோடி தொலைபேசி எண்கள் முடக்கம்: ஒன்றிய தொலைத்தொடர்பு துறை செயலாளர் தகவல்

கோவா: மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கோடிக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை முடக்கி இருப்பதாக ஒன்றிய தொலைத்தொடர்பு துறையின் செயலாளர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார். கோவாவில் பாதுகாப்பு விஷயங்கள் குறித்த வருடாந்தர மண்டல மாநாட்டில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய மிட்டல் சஞ்சர் சாத்தி.

இணையதளம் மூலம் ஏமாற்று அழைப்புகளை 97 சதவீதம் குறைத்திருப்பதாகவும், நிதி நிறுவனங்கள் தகவல்களை திரட்டவும், நிதி மோசடியை புகார் அளிக்கவும் அனுமதிக்கும் டிஜிட்டல் நுண்ணறிவு தளத்தை தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் உருவாக்கி இருப்பதாகவும் கூறினார். மேலும், இந்த தளம் சைபர் பாதுகாப்பான சூழலை முன்கூட்டியே உருவாக்க உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags : Union Telecom ,Goa ,Neeraj Mittal ,Mittal ,conference ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது