×

ஆசிரியர் தினம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஆசிரியர் தினத்தை ஒட்டி துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “இருளை அகற்றி வெளிச்சம் பரப்பும் சூரியன் போல், அறியாமை அகற்றி அறிவு ஒளி பரவிடச் செய்யும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ச்சமூகம் அறிவுசார் சமூகமாக வளர்ச்சி பெற அடித்தளம் அமைத்தவர்கள் ஆசிரியர்களே!

வகுப்பறையில் தங்களையே மெழுகுவர்த்தியாக ஏந்தி, மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.

ஆசிரிய பெருமக்களின் முன்னேற்றத்துக்கு கழகமும் – கழக அரசும் என்றும் துணை நிற்கும்!” என பதிவிட்டுள்ளார்.

Tags : Teachers' Day ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...